ஞாயிறு, 9 டிசம்பர், 2012


பஞ்சபூத ஆராதனை

நமது பூத உடல் பஞ்சமஹா பூதத்தால் ஆனது. உணவும் அன்ன ரஸமும் பஞ்சமஹா பூதத்தையே சார்ந்துள்ளது. பஞ்ச மஹாபூதத்தில் துவங்குகின்ற சிருஷ்டியானது பஞ்சமஹா பூதத்திலேயே ஒடுங்குகிறது. உலகில் உள்ள எந்த வஸ்துவும் பஞ்சமஹா பூதத்தின் தொடர்பு இல்லாமல் இல்லை. மெய்ஞான தேடுதலில் பஞ்சமஹா பூதத்தின் கீழ்கண்ட தன்மைகளைத் தியானித்து ஆராதனை செய்து மெய்ஞான அறிவை, தெளிவைப் பெறலாம். 

பூமி
வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களைப் பொறுமையாகக் கையாளுதல் போன்றவை பூமியைப் பார்த்து உணரலாம். அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்று வள்ளுவர் கூறியதை நினைவில் கொள்க.

நீர்
எங்கு உற்பத்தியானாலும் ஒரு லட்சிய இடத்தை நீர் சென்று சேர்கிறது. குறிக்கோளை அடைதல் என்பதை ஜல மஹாப் பூதத்தைத் தியானம் செய்வதன் மூலம் அடையலாம்.

நெருப்பு
நல்லவரோ தீயவரோ, வலியவரோ சிறியவரோ, யார் கை வைத்தாலும் ஒரே தண்டனையைத் தரும் என்ற தத்துவம் அக்னி மஹாபூதத்தைச் சார்ந்த்து. இவ்வாறு நோயாளிகளிடம் பாரபட்சம் இல்லாமல் செயல்படும் அறத்தை, தர்மத்தை, அக்னித் தத்துவம் மூலம் உணரலாம்.

வாயு
எதிலும் பட்டும் படாமலும், தாமரை இலை மேல் காணப்படும் நீர்த்தன்மையைப் போல், உலகில் இருந்தும் பட்டும் படாமலும் வாழும் தன்மையை வாயு தத்துவம் மூலம் உணரலாம்.

ஆகாயம்
எங்கும் நிறைந்து இருக்கும் சைதன்யம் மற்றும் சூன்யம் எனும் தத்துவத்தை ஆகாய மஹாபூத தத்துவம் மூலம் ஆராதிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக