மீண்டும் ஒரு புது வருடம் !!!
மனித கற்பனையில் உருவான
டிசம்பர் 31
ம் ஜனவரி 1 ம்
மஹா மாயையின்
உண்மை நிலை
இறைவனின் திரு நாமங்களின் பெயரிலும்,
அளப்பரிய அருளாற்றலின் பெயரிலும் இத்தருணத்தில்
எனது நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றொரு
வருடம் கடந்து போயிற்று.
காலம் தன்னுடைய வேகத்தால்
அனைத்தையும்
இழுத்துச் சென்று
விட்டது.
நம் மனதின் நினைவலைகளைத் தவிர
!
பழமையின்
எந்த சுவடுகளும் இன்று இல்லை.
பழமையின்
நினைவு என்பதும்
நாம் உருவாக்கிய ஒரு கற்பனையே !
பழமை சார்ந்த நிகழ்வுகள் எதுவும்
இன்று, இப்பெழுது
நம்மிடத்தில் இல்லை.
நம் மன எண்ணங்களைத் தவிர
!
பிறப்பு,
இறப்பு, மகிழ்ச்சி, துக்கம் நோய், நலம்,
விருப்பு,
வெறுப்பு, கோபம், நிதானம் என
இருமையின்
பரிணாமங்கள்
பலவையும்
கடந்து போயின
வலிமையான
இந்த தருணமே, பழமையின் கூடாரமாகவும்,
எதிர்காலத்தை
நிச்சயிக்கும் சக்தியாகவும் விளங்குகிறது.
எனவே இந்த தருணத்தில் வாழ்வது
ஒரு பூரணமான வாழ்க்கையாகும்.
பழைய நினைவின் சிந்தனைகள் நம்மை
இறக்க வைக்கின்றன.
இனிவரும்
எதிர்காலத்தின் சிந்தனையில் இருக்கும் பொழுது
நாம் பிறக்கவேயில்லை.
இதோ இந்த தருணமே அனைத்து புதுமைகளின்
ஆரம்பம்.
இனிவரும்
வருடத்தில் புதிய விஷயம்தான் என்ன?
அதே நாட்கள், அதே
மாதங்கள்,
அதே நாட்காட்டி குறிப்புகள், மாறாத அதே மனிதர்கள்,
அதே அச்சுறுத்தும் புறச்சூழல்,
எல்லாமே
அதேபோல் உள்ளன.
இது எவ்வளவு பெரிய மாயை
?
இதைத்தான்
நாம் கொண்டாட விரும்புகிறோம்.
நம்மை உணர்ந்து தன்னிலையறிந்து நிலைப்பதே
உண்மையான
புதுவருட பிறப்பாகும் !
மகிழ்ச்சியாகும்
! கொண்டாட்டமாகும் ! மாற்றத்தைக் காணும்
மாறாத அகச் சூழலின்
இந்த உணர்வுக்கு மாற்றம்தான் ஏது ?
மரு. இல. மஹாதேவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக