ஞாயிறு, 9 டிசம்பர், 2012


பருவ மாற்றம்

             ஆயுர்வேத சித்த மருத்துவ புத்தகங்களில் இந்திய திருநாட்டில் ஆறு பருவங்கள் நிலவியதாகவும் அதை அனுசரித்து மக்கள் வாழ்ந்து வந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவை முறையே ஹேமந்த காலம் (பின்பனிக்காலம்), சிசிரகாலம் (முன்பனிக்காலம்), வசந்த காலம் (இளவேனில் காலம்) கிரிஷ்மகாலம் (முதுவேனில் காலம்), வர்ஷ காலம் (கார்காலம்), சரத்காலம் (கூதிர்காலம்) என ஆறு வகைப்படும். இந்த ஆறு பருவங்களையும் இன்றைய சுற்றுச்சூழலில் காண்பது சற்று கடினமானது. தமிழ்நாடு போன்ற இடங்களில் சரத் காலத்தையும் வசந்த காலத்தையும் நாம் அதிகம் காண முடிவதில்லை. மழையும் குறித்த சமயத்தில் வருவதில்லை. கோடையின் வெப்பம் அதிகரித்து விட்டது. ஆனால் ஒரு மனிதனுடைய வாழ்நாளில் ஒரு நாளை எடுத்துக் கொண்டால் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை உள்ள 24 மணி நேரமும் 4 மணி வீதமாகப் பிரித்து (6 x 4=24  என்ற விகிதத்தில்) இந்த ஆறு ருதுக்களும் அவன் உடலிலேயே ஏற்படுகின்றன. ஒவ்வொரு ருதுவுக்கும் ஒவ்வொரு குணம் உள்ளது. இந்த குணங்கள் நான்கு மணி வரை உடலில் நிலைத்து இருக்கின்றன. இந்த ஆறு குணங்களுமே சிகிச்சைக்கு முக்கியமான குணங்கள், நோய்க்கு முக்கியமான குணங்கள். இந்த ஆறு குணங்களையும் சரகர் ஷட்வித உபகிரமமாக (சிகிச்சையாக) சொல்கிறார். 
         இதை என்னிடம் நேரடியாகவோ, என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களிடமிருந்தோ மற்றும் ஆசிரியர்களிடமிருந்தோ நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஒரு நோயாளி ஒரு நாளில் எந்த நேரத்தில் நன்றாக இருக்கிறான் என்பதைத் தெரிந்துக் கொள்ளும்போது எந்த ருதுவின் குணத்தினால் அவனுக்கு சுகம் கிடைக்கிறது என்பதையும், எந்த நிலையில் கஷ்டப்படுகிறான் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக